அவல்பூந்துறையில் சர்வதேச யோகா தினம், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஈஷா வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-22 10:15 GMT

Erode news- சர்வதேச யோகா தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரம் அவல்பூந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பெருமாபாளையம் பகுதியில் உள்ள ஈஷா வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம், யோகா பயிற்சிகள் மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள் மற்றும் உடல் நலன்கள், யோகா பயிற்சியினால் தீர்வு காணக்கூடிய உடல் உபாதைகள், இளம் வயதில் யோகா பயிற்சிகள் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள், புகையிலை பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


மேலும், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலைப் பழக்க மீட்பு ஆலோசனை, பாதுகாப்பான குடிநீர் அவசியம் அதனால் தடுக்கப்படும் நோய்கள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் நன்மைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியது அவசியம், டெங்கு தடுப்பு பணியில் மாணவர்களின் பங்கு குறித்து சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முன்னதாக மாணவ, மாணவியர்களால் யோகா பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, பள்ளியின் சுற்றுப்புறம் மற்றும் உணவுக்கூடம் ஆய்வு நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பொறுப்பு ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர்கள் ஜீவானந்தன், தியானேஸ்வரன், ஜவகர் மயில்வாகனன் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவியர்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.


முகாமின், இறுதியாக அனைவராலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையுடன் பொது சுகாதாரத் துறை இணைந்து ஆனைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு பகுதிகளில் புகையிலை தடுப்பு விதிமீறல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News