கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி, மாணவர் மன்றத் தொடக்க விழா
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் சார்பாக முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று (12ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் சார்பாக முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி மற்றும் மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று (12ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் இளநிலை கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வு துறையின் சார்பில் சைபர் க்ரூஸ் என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா இன்று (12ம் தேதி) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இளநிலை கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் எம்.எஸ்.கோகிலா வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரியின் தாளாளர் பொ.தே.தங்கவேல் தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை ஆற்றினார். விழாவில் 2024 - 2025ம் கல்வியாண்டின் கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வுத் துறையின் நடப்பு ஆண்டுத் திட்டங்களை துறைத்தலைவர் பி.ரமேஷ் எடுத்துரைத்தார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த டெஸ்ட் லீட்,சிபிஐ இன்க் பணியாற்றும் எஸ். சந்தோஷ் குமார் சிவசாமி செயற்கை நுண்ணறிவு குறித்தும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்தும், செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்களுக்கு எத்தகைய பணி வாய்ப்புக்களைப் பெறலாம் என்றும்,அதற்கு மாணவர்கள் தங்களை எவ்வகையில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.
இளநிலை கணினி அறிவியல் துறையின் சார்பாக ஆண்டுதோறும் வெளிவரும் இதழ்களான ஐடி அன்லிமிடெட் மற்றும் சைபர் ட்ரேஸ்கள் செய்தி கடித இதழும்,கம்ப்யூட்டர் இன்ஃபோ கேலரி என்ற இதழும் வெளியிடப்பட்டது. அதன்பின் இளநிலை கணினி அறிவியல் மற்று தகவல் பகுப்பாய்வுத் துறையைச் சார்ந்த மாணவர்கள் சைபர் க்ரூஸ் என்ற மாணவர் அமைப்பின் பொறுப்பாளர்கள் பதவியேற்று கொண்டனர்.
இவ்விழாவில், இளநிலை கணினி அறிவியல் மற்றும் தகவல் பகுப்பாய்வு துறையைச் சார்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். விழா இறுதியில், மாணவர் அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.கார்த்திக் நன்றியுரை ஆற்றினார்.