ஈரோட்டில் 160 அரங்குகளுடன் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தொடக்கம்
ஈரோட்டில் 160 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (நேற்று) தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் 160 அரங்குகளுடன் அமைக்கப்பட்ட தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சியை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சனிக்கிழமை (நேற்று) தொடங்கி வைத்தார்.
ஈரோடு பெருந்துறை சாலையில், செங்கோடம்பள்ளம் அருகே உள்ள பரிமளம் மஹாலில் ஈடிசியா (மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்) சார்பில், 'ஈரோ இன்டெக்-2023' என்ற பெயரில் தொழில் மற்றும் வர்த்தக கண்காட்சி தொடக்க விழா சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது. விழாவுக்கு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் கன்கரா தலைமை வகித்து, கண்காட்சியினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், ஈடிசியா தலைவர் திருமூர்த்தி வரவேற்று பேசினார். ஈரோ இன்டெக் குறித்து கண்காட்சியின் தலைவர் புவிச்சந்தர், ஈடிசியா குறித்து முன்னாள் தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினர். ஈரோ இன்டெக் மலரினை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் வெளியிட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்றுக்கொண்டார். இதையடுத்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 160 அரங்குகளையும் ஆட்சியர், மேயர், துணை மேயர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதில், கல்லூரி மற்றும் ஐடிஐ கல்லூரி மாணவ-மாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமைக்கப்பட்டிருந்த அரங்கில், அவர்களது கண்டுபிடிப்புகள் குறித்தும், அதன் பயன் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட உதவி மேலாளர் பூபதி ராஜா, தேசிய சிறு தொழில் சங்க மண்டல பொதுமேலாளர் சரவணகுமார், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி(சிட்பி) ஈரோடு பொதுமேலாளர் ராமச்சந்திரன், மாவட்ட தொழில் மையம்(டிக்) பொதுமேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு சிறு குறு தொழில் சங்க தலைவர் மாரியப்பன், ஈடிசியா முன்னாள் தலைவர்கள் சரவணன், சுப்பிரமணியன், குழு உறுப்பினர்கள் கந்தசாமி, சரவணபாபு, சுரேஷ், நிகழ்ச்சி ஒருங்கினனப்பாளர் குமரசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஈடிசியா செயலாளர் ராம்பிரகாஷ் நன்றி கூறினார்.