பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,136 கன அடியாக அதிகரிப்பு

Erode News- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (19ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,578 கன அடியிலிருந்து 4,136 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-08-19 02:30 GMT

Erode News- பவானிசாகர் அணை.

Erode News, Erode News Today- பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (19ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,578 கன அடியிலிருந்து 4,136 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. நேற்று (18ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,578 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (19ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,136 கன அடியாக அதிகரித்துள்ளது. 

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 96.85 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 96.83 அடியாக சற்று குறைந்தது. அணையில் நீர் இருப்பு 26.33 டிஎம்சியிலிருந்து 26.31 டிஎம்சியாக குறைந்தது.

அதேசமயம், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,100 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 800 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 2,200 கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 5.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News