பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (மே.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,316 கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update: 2024-05-14 05:30 GMT
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை.

  • whatsapp icon

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (மே.14) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,316 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும்.

இந்நிலையில், அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (மே.13) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 24 கன அடி நீர் வந்தது.

இன்று (மே.14) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,316 கன அடியாக அதிகரித்துள்ளது. அப்போது, அணையின் நீர்மட்டம் 44.36 அடியாக இருந்தது.

அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 200 கன நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையின் நீர் இருப்பு 3.22 டிஎம்சியாக இருந்தது. மேலும், அணைப்பகுதியில் 13.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News