ஈரோடு பெரியார் நகர் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 7பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை சோதனையில் ஈடுபட்டனர்.;
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரோடு பெரியார் நகரில் உள்ளது.
இந்த நிறுவனத்தில், 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும்ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.