ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மன்றம் தொடக்க விழா
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்றத் தொடக்க விழா கல்லூரி அரங்கில் இன்று நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்றத் தொடக்க விழா கல்லூரி அரங்கில் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில், தமிழ் மன்றத் தொடக்க விழா கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் வழிகாட்டுதலின்படி கல்லூரி அரங்கில் இன்று (6ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில், கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ தலைமையுரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக சூழலியலாளர் மற்றும் படைப்பாளர் கோவை சதாசிவம் கலந்து கொண்டு "இயற்கையும் தமிழும்" என்ற தலைப்பில் தமிழ்மொழி நம் இயற்கை வளங்களோடும் பஞ்சபூதங்களோடும் தொடர்புற்று இருப்பதை எடுத்துரைத்து, அதனால் நாம் இயற்கையையும் தமிழையும் இரு கண்களாய் காக்க வேண்டும் என்று சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக, ஈரோடு மாவட்டம் நத்தக்கடையூரைச் சேர்ந்த படைப்பாளர் தேவிபாரதி "நீர்வழிப்படூஉம்" என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றதனை சிறப்பிக்கும் வகையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், படைப்பாளர் தேவிபாரதி மாணவர்கள் படைப்பளர்களாக உருவாக வேண்டும் ஏனென்றால் படைப்பாளி தான் தம் மண்ணையும் மொழியையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வர் என்று பேசினார்.
மேலும், இளங்கலைத் தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு பயிலும் வெ.க வெற்றிவேல் என்கிற மாணவனின் "சிறகின் இறகுகள்" எனும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், தமிழ்த்துறைத் தலைவர் ப.தினகரன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் க.இளவரசன் நன்றியுரை ஆற்றினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.