ஈரோடு நந்தா சென்டரல் பள்ளியில் மாணவ தலைவர்கள் பதவியேற்பு விழா
ஈரோடு கூரப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் பள்ளியில் மாணவர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு கூரப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் பள்ளியில் மாணவர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஈரோடு கூரப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நந்தா சென்டரல் பள்ளியில் மாணவர்களின் பதவியேற்பு விழா ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பதவியேற்பு விழாவில் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் பணிபுரிந்து வரும் தேசிய மாணவர் படையின் அதிகாரியும், உதவி பேராசிரியருமான முனைவர் மைதிலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில், பள்ளியின் முதல்வர் ராஜேஷ், கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரையும், தலைமை ஏற்க உள்ள வெவ்வேறு அணியின் மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களை வரவேற்று பேசினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டு பள்ளியின் மாணவர்கள் அணி தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் ஹரிபிரசாத் மற்றும் மாணவிகளின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவி வாங்கல் வர்தினி ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து, அதற்கான முத்திரையினை சிறப்பு விருந்தினர் முனைவர் மைதிலி அணிவித்து கவுரவப்படுத்தினார்.
மேலும், விளையாட்டு, கலாச்சாரம் உட்பட ஐந்து அணி தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து, அதற்கான முத்திரையினை அணிவித்து, அவர் உரையாற்றுகையில், தலைவன் ஒருவன் ஆட்டு மந்தை போல் செயல்படாமல் தமது எண்ணங்களை வளப்படுத்தி சிந்தனையை மேலோங்கி ஒரு செயலை செயல்படுத்தும் போது வெற்றியினை எளிதாக்கி கொள்ளலாம்.
அதுபோல எந்தவொரு செயலையும் கவனம் சிதறாமல் மிகுந்த பயிற்சினை மேற்கொண்டு செயல்படும்போது தலைசிறந்த தலைவனாக உருவெடுக்க வழி வகுக்கும். சிறு வயது முதலே மாணவர்களின் தலைமை பண்பினை மெருகூட்டும் வகையில் இது போன்ற பதவியேற்பு விழா மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு முழுமையான ஈடுபாடும். தன்னம்பிக்கையும் மிகவும் அவசியமானது. அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கை தன் வசப்படும் என்று கூறி மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
இவ்விழா ஏற்பாடுகளை செய்த உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி, முனைவர் ஆறுமுகம், மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன் ஆகியோர் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.