ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

Erode news- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா இன்று (28ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-06-28 05:30 GMT

Erode news- கொங்கு கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா இன்று (28ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 2024 - 25ம் கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கான பட்ட வகுப்புகள் தொடக்க விழா பெருந்துறை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட்டின் தலைவர் டாக்டர்.குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், கல்லூரியின் தாளாளர் தங்கவேல் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, இன்று (28ம் தேதி) நடைபெற்றது.


இந்த விழாவில், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ வரவேற்புரை ஆற்றினார். கோவை மாவட்டம் தென்சேரிமலை திருநாவுக்கரசு திருநந்தவனத் திருமடத்தைச் சார்ந்த தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார் அனைத்து மாணவர்களுக்கும் தங்களின் வருங்கால வாழ்க்கை நல்ல வாழ்க்கையாக அமைய அருளாசி வழங்கி, உரையாற்றினார்.

விழாவில், கோவை மாவட்டம் பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி மேனாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். மாணவர்களின் எதிர்காலம் அவரவர்களின் எண்ண மேம்பாட்டில் இருக்கிறது. சிந்தனைகள் தெளிவாகவும் அதற்கேற்ற நடத்தை வெளிப்பாடுகளைச் செயல்பாட்டில் காட்டினால் வெற்றி உங்கள் காலடியில், எழுந்து நடக்கக் கற்றுக்கொடுத்த உங்களின் பெற்றோர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்துள்ள பட்டப்படிப்புகளின் வாயிலாக உங்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக வழிகாட்டியுள்ளனர்.


வருங்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு எது தேவை? எது தேவையில்லை? என்பதைப் பகுத்துணர்ந்து, உங்களின் வாழ்க்கையைத் தன்னம்பிக்கையோடு தளராத மனவூக்கத்தோடும் எதிர்கொள்ள வேண்டும். கல்லூரிப் படிப்பில் சேர்ந்துள்ள நீங்கள் பிற்காலத்தில் வாழத் தேவையான அடிப்படை அறிவையும் அனுபவத்தையும் திறன்களோடு பயின்று செல்ல வேண்டும். எதிர்கால வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு நிகழ்காலத்தில் நீங்கள் பயிலவிருக்கும் இந்தக் கல்லூரிப் படிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

படிக்கும் காலத்திலேயே பிடித்தத் திறமைகளை வளர்த்துக் கொண்டு செல்லுதல் வேண்டும். எல்லா வளங்களும் சிறப்பாகப் பெற்று கல்லூரிப் படிப்பைத் திறம்பட மூன்றாண்டுகளும் முடித்து நல்ல எதிர்காலத்துடன் செல்ல உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். கல்லூரி பயிலும் காலங்களில் நல்வழியில் நடந்து முன்னேற்றத்தைக் காண வேண்டும்.


இளமைக்காலத்தில் உடலையும் மனதையும் செம்மைப் படுத்தி வெற்றிப்பாதைக்கான வழிகளைக் கண்டறிந்து படிப்புடன் நடைமுறை வாழ்வியலையும் நல்ல எண்ணங்களையும் கற்றுச் செல்ல வேண்டும். பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளை எவ்வாறு கண்ணும் கருத்துமாக வளர்த்தல் வேண்டும். அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும். தாங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும் எடுத்துக் கூறினார்.

மேலும், வகுப்பறை மட்டுமல்லாது அது தவிர்ந்த படிப்பினையைக் கற்பித்தலில் வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களின் கடமைகளையும் எடுத்துரைத்தார். தன்னம்பிக்கை சார்ந்த எழுச்சியூட்டும் சிந்தனைகளோடு எடுத்துரைத்து பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்க்கும் வகையில் பேசினார். தொடர்ந்து, கல்லூரி இறுதித்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி வழங்கிய பேராசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.


இவ்விழாவில் ஈரோடு, கொங்கு பாலிடெக்னிக் மற்றும் கொங்கு நேச்சுரோபதி அண்ட் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தாளாளர் வெங்கடாசலம், கொங்கு நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தேவராஜா, தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட்டின் பாரம்பரிய பாதுகாவலர்கள் பழனிசாமி, முத்துசாமி, சச்சிதானந்தன் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் கல்லூரியில் மாணவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்று பேசினார். நடைபெற்ற இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இறுதியில், விழாவின் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறைத்தலைவர் குமரகுரு நன்றியுரையாற்றினார்.

Tags:    

Similar News