கொடிவேரி தடுப்பணைக்கு 20 நாளில் வந்த 72 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு 20 நாளில் 72 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Update: 2024-05-22 12:40 GMT

கொடிவேரி தடுப்பணை.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு 20 நாளில் 72 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை நிரம்பி அருவி போல், நீர் விழுவதால், இதில் குளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். 

இக்கொடிவேரி தடுப்பணையில் குளிக்கவும், பூங்காவுக்கு செல்லவும் நீர்வளத்துறை சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் கணிசமான வருவாய் நீர்வளத்துறைக்கு கிடைக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடிவேரி அணைக்கு  வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே 1ம் தேதி தேதி முதல் 20ம் தேதி வரை மொத்தம் 72 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து சென்றதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News