நீட் குளறுபடிகள் சிபிஐ விசாரணை வேண்டும்: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன்

Erode news- நீட் தேர்வில் குளறுபடிகள் இதுவரை நடைபெறாத முறையில் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-06-14 12:45 GMT

Erode news- இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில் ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் மருத்துவர் அசோகன் மற்றும் மாநில தலைவர் மருத்துவர் அபுல் ஹாசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Erode news, Erode news today- நீட் தேர்வில் குளறுபடிகள் இதுவரை நடைபெறாத முறையில் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளையின் சார்பில், ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஒலி மாசுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பதாகைகளை ஏந்தி பேரணியை நடத்தினர்.


காலிங்கராயன் இல்லத்திலிருந்து தொடங்கிய இந்த பேரணியை,  இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தொடங்கிய வைத்தார். ஈரோட்டின் முக்கிய சாலைகள் வழியாக சென்றிருந்த பேரணி இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முடிவடைந்தது.

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் கூறுகையில், நீட் குளறுபடிகள் இதுவரை நடைபெறாத முறையில் நடைபெற்றுள்ளதால் சிபிஐ விசாரணை வேண்டும். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நீதி வேண்டும். உச்சநீதிமன்றம் சரியான முறையில் நீதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம். 1653 மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் நீட் தேர்வு வைப்பதால் தீர்வு கிடைக்காது. அது தீர்வே கிடையாது.

மருத்துவர்களுக்கும் , நோயாளிகளுக்கும் இடையேயான உறவு தகர்ந்து விட்டது. மருத்துவர்கள் சரியான முறையில் நடப்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் எடுத்து வருகிறது என்றார்.

Tags:    

Similar News