ஈரோட்டில் அதிகரிக்கும் வெப்பநிலை: இன்று 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் இன்று 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.;

Update: 2023-03-27 12:45 GMT

பைல் படம்.

தமிழகத்தில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் நடமாடமுடியாத அளவுக்கு வெப்பம் உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மேலும் வியாபாரம், தொழிலுக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கரும்பு பால், இளநீர், மோர், குளிர்பானங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இதனால் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சாலையில் ஆங்காங்கே இளநீர் கடை, கரும்பு பால் கடைகள் புதிதாக தோன்றி உள்ளன.

இந்நிலையில், ஈரோட்டில் இம்மாதத்தில் மிக அளவு வெப்பநிலை பதிவாகி வருகிறது. இன்று (திங்கட்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை  பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,குறைந்தபட்ச வெப்ப நிலை 72.32 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகி உள்ளது.

இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசனா மழை பொழிவு பதிவாகியிருந்தாலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை என்கின்றனர் மக்கள். 

Tags:    

Similar News