கூகலூரில் சுகாதார செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு சுகாதார களப்பணி கருத்தரங்கம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் சுகாதார செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு சுகாதார களப்பணி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (10ம் தேதி) நடந்தது.
கோபி அருகே கூகலூரில் சுகாதார செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு சுகாதார களப்பணி விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (10ம் தேதி) நடந்தது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா செவிலியர் கல்லூரியை சேர்ந்த சுகாதார செவிலியர் பயிற்சி மாணவிகளுக்கு காசநோய் ஒழிப்பு, தீவிர வயிற்றுப்போக்கு நோய், டெங்கு தடுப்பு, வைட்டமின் ஏ குறைபாடுகள், இளம் வயது திருமண எதிர்ப்பு குறித்து சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில், காசநோய் பரவும் விதம், காச நோயின் வகைகள் அதன் பாதிப்புகள், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகள் அவை இலவசமாக கிடைக்கும் இடங்கள், இரு மாத கால தீவிர வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு முகாமின் நோக்கம் அதன் பயன்கள், வயிற்றுப்போக்கு நோய்க்கான காரணிகள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்பாடுகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்களின் நோக்கம், வைட்டமின் ஏ குறைபாடுகளால் ஏற்படும் உடல் பாதிப்புகள், இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பெண் கல்வி பாதிப்புகள் மற்றும் சமூக பின்னடைவுகள், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரசவகால தாய் சேய் மரணங்கள், கர்ப்பச்சிதைவுகள், குறைமாத பிரசவங்கள், ஊட்டச்சத்து இல்லா குழந்தை பிறத்தல், இரத்த சோகை நோய் குறித்த சுகாதார நலக்கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர்கள் லட்சுமி பிரியா, அபிராமி, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், சுஜித், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செந்தில்குமார் மற்றும் சுகாதார செவிலியர் பயிற்சி மாணவியர்கள் 25 பேர்கள் கலந்து கொண்டனர்.