பவானி நர்சிங் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்..!
ஈரோடு மாவட்டம் பவானி நர்சிங் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.
பவானி நர்சிங் கல்லூரியில் சுகாதார விழிப்புணர்வு முகாம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட வரதநல்லூர் பகுதியில் உள்ள பவானி காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில் தீவிர வயிற்றுப் போக்கின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், வயிற்றுப்போக்கு நோய் உருவாகுவதற்கான காரணிகள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், காலாவதியான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், ஓஆர்எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் நன்மைகள், கை கழுவும் வழிமுறைகள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் மோகனா, சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், குப்பன், ஜெயஹரி மற்றும் நர்சிங் கல்லூரி மாணவியர்கள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.