பவானியில் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம்
Erode news- ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு உலக மாதவிடாய் சுகாதார தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
Erode news, Erode news today- பவானியில் தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு உலக மாதவிடாய் சுகாதார தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானி வட்டாரம் மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட ஊராட்சி கோட்டையில் உள்ள தனியார் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உலக மாதவிடாய் சுகாதார தினம் மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீங்குகள், உடல் நல பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய தலைமுறையினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, மாதவிடாய் காலத்தில் வளர இளம் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார பராமரிப்பு முறைகள், தமிழ்நாடு அரசின் மாதவிடாய் சுகாதார திட்டத்தில் இலவச நாப்கின்கள் கிடைக்கும் இடங்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் சுகாதார சவால்கள் பெண்களுக்கான மாதவிடாயின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதாரம் மற்றும் உணவு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மழைக்கால நோய்கள் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள், மழைக்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுற்றுப்புற சுகாதார வழிமுறைகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள், மாவட்ட மன நலத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள், மனநல ஆலோசனைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மாவட்ட மனநலத்திட்ட சமூக சேவகர் கவிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 75 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.