அம்மாபேட்டை மாத்தூர் நடுநிலைப் பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

Erode news- அம்மாபேட்டை அருகே உள்ள மாத்தூர் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-21 05:00 GMT

Erode news- சுகாதார விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை வட்டாரம் ஆலாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் உபயோகிப்பதின் அவசியம், டெங்கு தடுப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகள் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் (19ம் தேதி) நடைபெற்றது.


இந்த முகாமில் பாதுகாப்பான குடிநீர் பருகுவதன் மூலம் தடுக்கப்படும் நோய்கள், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள் சுத்தம் செய்ய வேண்டியதின் அவசியம், சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள், அசுத்தமான குடிநீர் பயன்பாட்டினால் ஏற்படும் நோய்கள், அதன் பாதுகாப்பு முறைகள், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் மாணவர்களின் பங்கு ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில் ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், சுகாதார ஆய்வாளர் சீனிவாச ரகுபதி ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் 80 பேர்கள் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்களுக்கு கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மதிய உணவு கூடத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, பாதுகாப்பான உணவுகளை வழங்குவதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News