அந்தியூரில் காரில் கடத்தி வந்த ரூ.2.97 லட்சம் குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூரில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் காரில் கடத்தி வந்த ரூ.2.97 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Erode News, Erode News Today- அந்தியூர் அருகே பர்கூரில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில் காரில் கடத்தி வந்த ரூ.2.97 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் சோதனைச்சாவடியில் போலீசார் இன்று (31ம் தேதி) வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்ததில், அதிலிருந்தவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார்.
சந்தேகத்தின் பேரில், போலீசார் காரில் சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் செண்டாவைச் சேர்ந்த சுஜ்ராம் (வயது 27) என்பரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 792 மதிப்புள்ள 336 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் குற்றச்செயலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் கைது செய்யப்பட்ட சுஜ்ராம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து குட்காவை கோவை பகுதிக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து, தொடர்ந்து விசாரணை நடக்கிறது.