ஈரோட்டில் குருநாதசுவாமி கோயில் விழா முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம்..!

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

Update: 2024-07-30 09:45 GMT

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் விழா தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம்.

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் திருவிழா ஜூலை 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. ஜூலை 24ம் கொடியேற்றம் நடைபெற்றது.

இதனையடுத்து, ஜூலை 31ம் தேதி முதல் வனபூஜை நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இத்திருவிழா தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நேற்று (29ம் தேதி) நடைபெற்றது.

கூட்டத்தில், திருவிழாவில் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News