அந்தியூர் விற்பனைக் கூடத்தில் ரூ.11.64 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெற்ற ஏலத்தில் ரூ.11.64 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.;
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.
Erode News, Erode Today News, Erode Live News - அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் புதன்கிழமை (இன்று) நடைபெற்ற ஏலத்தில் ரூ.11.64 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் இன்று நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், கள்ளிப்பட்டி, எண்ணமங்கலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில், மொத்தம் 458 மூட்டைகளில் நிலக்கடலை (காய்ந்தது) வரப்பெற்ற நிலையில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 68 ரூபாய் 68 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 81 ரூபாய்க்கும், சராசரி விலையாக ரூ.74 ரூபாய் 24 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 162.84 குவிண்டால் நிலக்கடலை ரூ. 11 லட்சத்து 63 ஆயிரத்து 966க்கு விற்பனையானது.
இதனை, ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான வியாபாரிகள் வாங்கி சென்றதாக ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் தெரிவித்தார்.