சுதந்திர தினம்: ஈரோடு மாவட்ட கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபைக் கூட்டம்
Erode News- சுதந்திர தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (15ம் தேதி) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
Erode News, Erode News Today- சுதந்திர தினத்தையொட்டி, ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (15ம் தேதி) கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான நாளை (15ம் தேதி) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டம் நடைபெறும் இடம், நேரம், ஆகியன தொடர்புடைய கிராம ஊராட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்.
நாளை (15ம் தேதி) வியாழக்கிழமை நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் (01.04.2024 முதல் 31.07.2024 முடிய) மற்றும் இதர விவரங்களுக்கு கிராம சபையின் ஒப்புதல் பெறுதல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், துாய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்படும்.
அதேபோல், இணைய வழி வரி செலுத்தும் சேவை குறித்த விவரத்தை முன் வைத்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்த விவரத்தை முன் வைத்தல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைபடுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு குறித்த விவரம் முன் வைத்தல் தொடர்பாக விவாதிக்கப்படும்.
மேலும், தமிழ்நாடு உயிரிப் பல்வகைமை மேலாண்மை குழுவின் செயல்பாட்டை உறுதி செய்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட 2024-25ம் ஆண்டுக்கான ஜுலை 31ம் தேதி வரையிலான பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கத்தில் பணிகள் குறித்த விவரத்தினை உறுதி செய்தல் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படும்.
அனைத்து கிராம ஊராட்சிகளும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கும் பொருட்டு வட்டார அளவில் உதவி இயக்குநர் நிலையில் பற்றாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.