ஈரோடு வேளாளர் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
Erode News- ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்றது.
Erode News, Erode News Today- ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 19து பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று (24ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவில், முதல்வர் முனைவர் ஜெயராமன் ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஏரோநாட்டிகல் டெவலப்மெண்ட் ஏஜென்சி விஞ்ஞானி 'ஹெச்' திட்ட இயக்குனர் டாக்டர்.மதுசூதன ராவ் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 783 பட்டதாரிகளை வாழ்த்தி பட்டங்களை வழங்கினார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 45 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். 2023-2024ம் கல்வியாண்டில் 1529 மாணவர்களுக்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் மூலம் 5.7 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
விழாவில், வேளாளர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜெயக்குமார், செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர்கள் யுவராஜா, ராஜமாணிக்கம், குலசேகரன், வேலுமணி, சின்னசாமி விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரி முதல்வர் ஜெயராமன் வாழ்த்துரை வழங்கினார்.
புல முதல்வரும் நிர்வாக மேலாளருமான பெரியசாமி, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.