ஈரோடு ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால், ஈரோடு - கரூர் சாலையில் கேட்புதூரில் இயங்கி ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளி மழலையர் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொலைநோக்கு பார்வையோடு கல்வியில் உயர வழிகாட்டும் பொருட்டு, எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழாவை நடத்தியது.
விழாவுக்கு பள்ளியின் தலைவர் ராகுல் தலைமை தாங்கினார். செயலாளர் ராதா, பள்ளியின் முதன்மை கல்வி அலுவலர் கீர்த்தனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆர்டி நிறுவன தலைவர் செந்தில்குமார் பங்கேற்று வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து மழலையர் வகுப்பு முடித்த மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பள்ளியின் ஆசிரியை, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பள்ளியின் முதல்வர் சங்கர் செய்திருந்தார்.