நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;

Update: 2024-03-01 11:45 GMT

Erode news- நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு கோயமுத்தூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சிவக்குமார் பட்டம் வழங்கினார்.

Erode news, Erode news today- பெருந்துறை அருகே உள்ள நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா‌ நடைபெற்றது. இவ்விழாவிற்கு, நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கல்லூரியின் செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோயமுத்தூர் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் சிவக்குமார் பங்கேற்று, அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசையில் இடம் பெற்ற 9 பேருக்கு தங்க பதக்கங்கள் மற்றும் 155 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணிவண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News