பெருந்துறையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் 1,761 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.167.50 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2022-08-26 06:00 GMT

பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்தார். அவர் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.

இன்று காலை 9 மணியளவில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு அரசு விழா நடைபெறும் பெருந்துறை அருகே உள்ள சரளைக்கு வந்தார். வழியில் கிரே நகரில், அத்திக்கடவு-அவினாசி திட்ட 4வது நீரேற்று நிலையத்தில் நடந்து வரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். 


இதையடுத்து பெருந்துறை அருகே உள்ள சரளையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி துறையில் முடிவுற்ற ரூ.19 கோடியே 46 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான பணிகள், நிதி துறையில் முடிவுற்ற ரூ.1 கோடியே 6 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பிலான  பணிகள், கைத்தறி மற்றும் கதர்துறையில் முடிவுற்ற  ரூ.46 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலான பணிகள், ரூ.11 வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் முடிவுற்ற ரூ.1 கோடியே 72 ஆயிரம் மதிப்பிலான பணிகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையில் முடிவுற்ற ரூ.21கோடியே 35 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலை துறையில் முடிவுற்ற ரூ.11 கோடியே 73 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பணிகளை திறந்து வைத்தார். 


இதனையடுத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் முடிவுற்ற ரூ.49 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான பணிகள், பள்ளி கல்வி துறையில் முடிவுற்ற ரூ.1 கோடியே 72 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான பணிகள், ரூ.1.20 கோடியில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள துறையில் முடிவுற்ற பணிகள், மருத்துவ துறையில் முடிவுற்ற ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பிலான பணிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் முடிவுற்ற ரூ.3 கோடியே 41 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பிலான பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முடிவுற்ற ரூ.4 கோடியே 70 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான பணிகள் மற்றும் கூட்டுறவுதுறையில் முடிவுற்ற ரூ.9 லட்சம் மதிப்பிலான பணிகள் என மொத்தம் ரூ.261 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான 135 பணிகளை திறந்து வைத்தார்.


மேலும், ரூ.183.70கோடியே 84 ஆயிரம் மதிப்பிலான 1,761 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு ரூ.167 கோடியே 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் செல்வராஜ், அ. கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம், இ. திருமகன் ஈவெரா, இ.ஆர். ஈஸ்வரன், ஈரோடு மாநகராட்சி மேயர்  எஸ். நாகரத்தினம், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச். கிருஷ்ணணுண்ணி, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News