கோபிசெட்டிபாளையம் புதிய சார் ஆட்சியர் பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியராக எஸ்.சிவானந்தம் நேற்று (9ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
Erode Today News, Erode News - கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியராக எஸ்.சிவானந்தம் நேற்று (9ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோபி வருவாய் கோட்டாட்சியராக கண்ணப்பன் கடந்த மார்ச் 6ம் தேதி பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, கோபி வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் பணியில் இருந்து நேற்று (9ம் தேதி) விடுவிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, புதிய சார் ஆட்சியராக அறிவிக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக பயிற்சி முடித்த ஐஏஎஸ் அதிகாரியான சி.சிவானந்தம் சார் ஆட்சியராக நேற்று (9ம் தேதி) திங்கட்கிழமை கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சார் ஆட்சியருக்கு வட்டாட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோபி வருவாய் கோட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் முதல் சார் ஆட்சியர் என இதுவரை 59 பேர் பணி புரிந்துள்ளனர். அந்த வரிசையில், 60வதாக சார் ஆட்சியர் சிவானந்தம் நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.