கோபி கொடிவேரி தடுப்பணை 3வது நாளாக இன்றும் மூடல்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை 3வது நாளாக இன்றும் (4ம் தேதி) மூடப்பட்டது.

Update: 2024-08-04 04:45 GMT

கொடிவேரி தடுப்பணை மூடப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை 3வது நாளாக இன்றும் (4ம் தேதி) மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது கொடிவேரி தடுப்பணை.  இந்த நிலையில், பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் நிலை இருந்தது.

இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 2ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் 4ம் தேதி (இன்று) வரை மூன்று நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் கடத்தூர் போலீசார் கொடிவேரி அணை பிரிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடுப்பணைக்கு வந்த சுற்றுலா பயணிகளை, நுழைய அனுமதியில்லை என போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

இதனால், வெளியூரில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து, 3வது நாளாக இன்றும் தடை உத்தரவால் கொடிவேரி தடுப்பணை மூடப்பட்டது. இதனால், தடுப்பணை வளாகம், பரிசல் துறை மற்றும் சிறுவர் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News