ஈரோட்டில் வரும் 4ம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தொடக்கம்
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும் 4ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஈரோடு மேட்டூர் சாலையில் திருச்சி கபே அருகில் உள்ள ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வருகிற 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கிறது.
இந்தப் பயிற்சியில், தங்கம் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, உரைகல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, 'ஹால்மார்க்' தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். வயது வரம்பில்லை. ஆனால், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
பயிற்சி முடித்தவர்கள் தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகளிலும். நகை அடகு கடைகளிலும் பணியாற்றலாம். பெரிய நகை வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராகவும் சேர லாம். உரிய ஆவணங்களுடன் ரூ.7 ஆயிரத்து 500 கட்டணம் செலுத்தி பயிற்சியில் சேரலாம் என்று மையத்தின் நிர்வாகி கள் தெரிவித்தனர்.