ஈரோட்டில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
Erode news- மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் சார்பில், ஈரோட்டில் ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
Erode news, Erode news today- மத்திய பனைப் பொருட்கள் நிறுவனம் சார்பில், ஈரோட்டில் ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில் மையத்தின் தலைமை பயிற்சியாளர் சாமிநாதன் தெரிவித்துள்ளதாவது:-
மத்திய பனை பொருட்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் காதி கிராம தொழில் வாரியம் சார்பில் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள ஜெம் ஜூவல்லரி டெக்னாலஜி பயிற்சி மையத்தில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 2ம் தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது.
இதில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், நகைக்கடன் வழங் கும் முறை ஆகியவை குறித்து பயற்சி அளிக்கப்படும். 18 வயது நிரம்பியவர்களும், 8-ம் வகுப்பு படித்து முடித்தவர் களும் கலந்துகொள்ளலாம்.
பயிற்சி முடிந்த பிறகு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி பெற்றவர்கள் தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றலாம். சொந்தமாக நகைக்கடை, நகை அடமான கடை அமைக்க தகுதி பெறுவார்கள். பிரபல நகை வியாபார நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.