குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Update: 2021-10-30 12:45 GMT

குண்டேரிப்பள்ளம் அணை.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கொங்கர்பாளையம் கிராமத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த தடுப்பணையின் நீர் பிடிப்புப் பகுதிகளாக, குன்றி, விளாங்கோம்பை, மல்லியம் துருவம், கம்பனூர் உள்ளிட்ட வனப்பகுதிகள் விளங்குகின்றன. குண்டேரிப்பள்ளம் அணையில் 42 அடிவரை நீரினைத் தேக்கி வைக்கலாம். அணையில் இருந்து 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.



இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.கடந்த சில நாட்களாக குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு காரணமாக, அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.தற்போது அணையின் நீர்மட்டம் 38.40 அடியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவையும் எட்டும் என்பதால் பொதுப்பணித்துறையினர் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News