மின்சாரம் தாக்கி தம்பதி பலி; நம்பியூர் அருகே அதிர்ச்சி

நம்பியூர் அருகே மின்சாரம் தாக்கி தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-31 04:45 GMT

ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆண்டியப்பன் வயது 65 விவசாயி. இவரின் மனைவி முனியம்மாள் வயது 60.மகன் வெங்கடாசலம் வயது 45. மகள்கள் பூங்கொடி வயது 43 சுமதி வயது 37. வீட்டின் முன் சாலை அமைத்து 40 நாட்டுக்கோழிகளை ஆண்டியப்பன் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு வீட்டின் முன் கணவன், மனைவி இறந்து கிடந்தனர். நம்பியூர் போலீசார், இருவரின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சில நாட்களுக்கு முன், இரு நாட்டுக்கோழிகள் திருட்டு போனது. இதனால் கோழி திருட்டு போவதை தடுக்க, சாலையை சுற்றி, செம்பு கம்பி மூலம், மின்வேலி அமைத்திருந்தார். நேற்றிரவு அதில் ஒயரை இணைக்கும்போது மின்சாரம் தாக்கி, தம்பதியினர் இறந்திருந்திக்கலாம். ஆனாலும், முழு விசாரணைக்குப் பிறகே, சம்பவத்தின் உறுதித்தன்மை தெரியவரும் என நம்பியூர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News