விவசாயிகளே குறைந்த விலையில் சின்ன வெங்காயம் விற்பனை: மக்கள் மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளே குறைந்த விலையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.;

Update: 2021-10-19 09:45 GMT

சின்ன வெங்காயம்.

ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி, அரங்கன் கோட்டை, காளிங்காரயன் பாசன பகுதிகளில், மஞ்சளில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் நடவு செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில், ஒரு கிலோ 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் விவசாாயிகள் அதிகம் பயிரிடவே, நடப்பாண்டு விளைச்சல் அதிகரித்து விலை குறைந்தது.

கடந்த மாதம் கிலோ 25 ரூபாய் என நிலையாக இருந்தது. தற்போது மேலும் சரிந்துள்ளது. கள்ளுக்கடை மேட்டில் நேற்று நடந்த வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் முதல் ரகம் கிலோ 20 ரூபாய், இரண்டாம் ரகம் 15 ரூபாய், ஈரப்பதம் கொண்டது10 ரூபாய்க்கு விற்றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை காலத்தில் சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாததால், அறுவடை செய்ததை, ரகம் பிரித்து விற்கிறோம். இடைத்தரகர்களின்றி வாரச்சந்தை, உழவர் சந்தைகளில் விவசாயிகளே விற்பதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்

Tags:    

Similar News