கோபி பேருந்து நிலையத்தில் இருந்த விளம்பர பலகைகள் அகற்றம்

கோபி பேருந்து நிலையத்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை நேற்று இரவு நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.;

Update: 2021-10-06 06:00 GMT
  • whatsapp icon

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் உத்தரவின் பேரில் நகராட்சி பொறியாளர் சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று இரவு கோபி பேருந்து நிலையத்தில் அபாயகரமான முறையில் இருந்த 20க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகளை அதிரடியாக நகராட்சி அதிகாரிகள் அகற்றினர். கோபி பேருந்தில் நிலையத்துக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வருவதால் விளம்பர பலகைகளால் விபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதற்கட்டமாக விளம்பர பலகைகளை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




 


Tags:    

Similar News