கோபிசெட்டிபாளையம் அருகே முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பி நபரை போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Update: 2022-05-03 00:30 GMT

கைது செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (எ) அர்த்தநாரீஸ்வரன் (50), நெசவுத் தொழில், இவர் கடந்த 30-ந்தேதி எட்டு வழி சாலை குறித்து,  தமிழக முதல்வரை செல்போன் மூலம் வாட்ஸ்அப்பில் அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பரப்பி பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இவர் மீது கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமுருகன் (40) என்பவர் பங்களாப்புதூர் போலீசில் நேற்று புகார் அளித்து உள்ளார்.இந்த புகாரின்பேரில் பங்களாப்புதூர் போலீசார் அர்த்தநாரீஸ்வரன் மீது 156, 504, 505, 506 (1) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், கைது செய்யப்பட்ட அர்த்தநாரீஸ்வரனின் அதிமுகவில் உறுப்பினராகவும், இவரது மனைவி தமிழரசி டி.என்.பாளையம் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News