தடுப்பூசி முகாம் மற்றும் 100 நாள் வேலையை ஆய்வு செய்த எம்எல்ஏ

பிச்சாண்டம்பாளையம் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் முகாம், 100நாள் வேலை திட்ட பணி இடத்தில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்.;

Update: 2021-10-27 12:30 GMT

ஆய்வு மேற்கொண்ட அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஜி வெங்கடாசலம், கோபி வடக்கு ஒன்றியம் பிச்சாண்டம்பாளையம் பகுதியில் தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆய்வு மேற்கொண்டு, 100நாள் வேலை திட்ட பணி இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வேலை செய்யும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். கோபி வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரவிந்தரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News