குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கனமழையால் நிரம்பி வழியும் குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;

Update: 2021-11-05 09:30 GMT

குண்டேரிப்பள்ளம் அணை

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கொங்கர்பாளையம் கிராமத்தில்,  வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ளது குண்டேரிப்பள்ளம் அணை. இது, 42 கனஅடி கொள்ளளவு கொண்டது. அணையின் நீர்பிடிப்பு மலைப்பகுதிகளான, குன்றி, மல்லியம்மன் துர்க்கம், விளாங்கோம்பை, கம்மனூர், கடம்பூர் போன்ற பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால்,  குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது.

இந்நிலையில், குன்றி, கம்மனூர், விளாங்கோம்பை மற்றும் ஆகிய கல்லூத்து வனப்பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,  அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி,  அணையில் இருந்து வினாடி 600 கன அடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதியில் கட்டப் பட்டுள்ள இரண்டு செக் டேம் வழியாக, பவானி ஆற்றில் கலக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News