கோபிச்செட்டிப்பாளையத்தில் பலத்த மழை: வீடு இடிந்து சேதம்
கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் கனமழை பெய்த நிலையில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.;
மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கோபி பகுதியில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. கமலா ரைஸ் மில் வீதி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (65). சமையல் தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (65). இவர்கள் 2 பேரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த மழை பெய்ததால், அதிகாலை 5 மணி அளவில் அவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அவர்கள், வீட்டின் வேறு பகுதியில் தூங்கி கொண்டு இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து விசாரித்து வருகின்றனர்.