கோபிசெட்டிபாளையத்தில் இடி, மின்னலுடன் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கோபிச்செட்டிபாளையம் பகுதியில் இடி, மின்னலுடன் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது.

Update: 2021-10-15 09:30 GMT

கோபியில் பெய்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம். 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில்,  நேற்று மதியம் 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. மேலும் கோபி சுற்றுவட்டார பகுதிகளான பாரியூர், கரட்டூர், கொளப்பலூர், கெட்டி சேவியூர், காசிபாளையம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது.

கனமழை காரணமாக கோபிசெட்டிபாளையம் பகுதியில்,  தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆயுத பூஜை என்பதால் பூஜை பொருட்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். மழை காரணமாக ரோடுகளில் தண்ணீர் அதிக அளவில் சென்றதால்,  பூஜை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர்.

பலத்த மழை காரணமாக கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் நகர் என்ற பகுதியில் உள்ள சுமார் 50 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

Tags:    

Similar News