கோபிச்செட்டிப்பாளையத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற சமூக வளைகாப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கலந்து கொண்டார்.;
ஈரோடு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு சமூக வளைகாப்பு நிகழ்ச்சி கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.விழாவிற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட கோபி அதிகாரி ஆனந்தி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்த 60 கர்ப்பிணி பெண்களுக்கு சமூகவளைகாப்பு சீர் பொருட்களை வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.