பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு
பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.;
கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த 12ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க கொடிவேரி தடுப்பணையில் தடை விதிக்கப்பட்டது. பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு குறையும்போது அனுமதிக்கப் படுகின்றனர்.
கடந்த 14ம் தேதி முதல் இங்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18ம் தேதி 3200 கன அடி பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இன்று காலை 8:00 மணிக்கு பவானி ஆற்றில் 5,700 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உபரிநீர் திறப்பு குறைந்தால் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவர். அதுவரை தடை தொடரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.