கொடிவேரி அணையில் குளிக்கசுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் கொடிவேரி அணை தண்ணீரில் குளித்து மகிழ்ந்து கொண்டாடிச்செல்வார்கள்

Update: 2021-10-16 23:15 GMT

கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி அணையில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் இருந்து அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து  கொண்டாடுவார்கள். 

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 7 நாட்களுக்கு பிறகு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதையடுத்து கொடிவேரி அணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கொடிவேரி அணைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்து சென்றனர். இதன்காரணமாக கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. 

Tags:    

Similar News