கோபி மொடச்சூர் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

ஈரோடு மாவட்டம் கோபி மொடச்சூரில் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை நேர உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2024-07-15 10:33 GMT

மொடச்சூர் ஓலப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

கோபி மொடச்சூரில் அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை நேர உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அரசு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை நேர உணவு திட்டத்தினை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவு படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஓலப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மொடச்சூர் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், குழந்தைகள் அனைவருக்கும் தமிழக அரசின் அறிவிப்பின் படி காலை நேர உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி கட்டிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழலையர் ஆங்கில வழி கல்வி வகுப்பறையினை திறந்து வைத்த பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியைகள் உட்பட வார்டு உறுப்பினர்கள் திருவேங்கடம், வாசுகி லட்சுமணன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News