ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இவ்ளோ கஞ்சா பறிமுதலா..!?

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 265 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-28 05:00 GMT

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர்.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 265 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி உட்கோட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. 


இந்த முகாமில், சட்ட ஆலோசகர் கணபதி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா ரணவீரன், கோபி துணை கண்காணிப்பாளர் தங்கவேல், கோபி காவல் நிலைய ஆய்வாளர் காமராஜ், உதவி ஆய்வாளர் ஜெகநாதன், கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் துரைபாண்டி, நம்பியூர் காவல் துறை ஆய்வாளர் நிர்மலா, கவுந்தப்பாடி ஆய்வாளர் விஜயலட்சுமி, கோபி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் கோபி உட்கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து காவலர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றனர்.

அந்திய நபர்களின் நடமாட்டம் தென்படும் பட்சத்தில் நபர்கள் குறித்து காவல் நிலையத்திலே அல்லது காவல் துறையிடுமோ உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும். வெளியூர் செல்லும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர்கள் தாங்கள் செல்லும் தேதி மற்றும் பின்வரும் தேதிகளை காவல் நிலையத்தில் தெரிவித்துச் செல்ல வேண்டும். வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாகவும் அல்லது வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் சிசி டிவி கேமரா அல்லது அலாரம் நிறுவி பராமரிக்க வேண்டும்.

எலக்ட்ரிசியன், பெயிண்டர்கள் குறிப்பாக சாக்கடை சுத்தம் செய்பவர்கள் நீங்கள் அழையாது தாங்களாக முன்வந்து வேலை செய்வதாக கூறினால் அவர்களை அனுமதிக்க வேண்டாம். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் தங்களிடம் விலாசம் கேட்டு வந்தால் கவனமாக உரையாட வேண்டும். இரு சக்கர வாகனங்களை இரவு நேரங்களில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். குற்றம் நிகழ்வதாக சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினரிடம் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். குற்றத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் பிடிபடும் பட்சத்தில் காவல்துறையினரிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.

லே-அவுட்களில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு தனியாக சிசிடிவி இரவு நேர செக்யூரிட்டிகளை பணி அமர்ந்த வேண்டும். உங்கள் இல்லம் தேடி வந்து நகை பாலிஷ் செய்து தருவதாக கூறினாலும் அல்லது கம்பளி விற்பனை செய்வதாக கூறினாலும் அவர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம். வீட்டிற்கு வரும் வேலையாட்களின் முழு விவரங்களையும் அறிந்த பிறகு வேலைக்கு அமர்த்தல் வேண்டும். தாங்கள் வீட்டில் இல்லாத போது நகைகளை பணமோ வைத்து நேரிட்டால் பீரோவிலோ பெட்டியிலோ வைக்காமல் வேறு இடங்களில் பிரித்து புத்திசாலித்தனமாக தங்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

வங்கியில் பணம் செலுத்த எடுக்க பெண் மற்றும் வயதானவர்கள் செல்லும் போது தக்க பாதுகாப்புடன் செல்ல வேண்டும். நகை பணம் மற்றும் மடிக்கணினிகள் ஆகியவைகளை வாகனங்களில் வைத்துச் செல்லக்கூடாது. விலை உயர்ந்த இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்டிப்பாக ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும். இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். தனியாக செல்லும் போது செல்போன் பேசுவதை தவிர்க்கவும், குழுவாக சொல்வது நல்லது தனியாக குடியிருக்கும் வயதானவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை வைத்து கொள்ள வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் செக்யூரிட்டிகளை நியமித்து கண்காணிக்க வேண்டும். பெண்கள் தனியாக செல்லும் போது நகையயை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். கழுத்தில் இருக்கும் நகைகளுக்கு சேஃப்டி பின் போட்டுக் கொள்ள வேண்டும் வீடுகளை திறந்து வைத்துக் கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும். கடை தெருவிற்கு செல்லும்போது பணத்தை கீழே போட்டு அல்லது உங்கள் மீது அரிப்பு பவுடர் அல்லது வேறு ஏதேனும் அசுத்தப்படுத்தும் பொருட்களை போட்டு உங்களின் கவனத்தை விசை திருப்பி உங்களிடம் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணம் திருட வாய்ப்பு உள்ளது கவனமாக இருங்கள். சாலைகளில் செல்போன் பேசிக்கொண்டு பேசுவதை தவிர்க்கவும் என பொதுமக்களிடம் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


பின்னர், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அவர் கூறியதாவது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக ஏடிஎஸ்பி தலைமையில் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தண்டனை கிடைக்கும் வரை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தை திருமணம் நடந்தால் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் இடையே குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மதுபான கடை அருகே 200 மீட்டர் வரை யாரும் தேவையின்றி நிற்க கூடாது என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுவை வாங்குவோர் பாரில் அருந்த வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தான் கூறியுள்ளோம். பொது இடங்களில் மது அருந்துவது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மது குடித்துவிட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் வழக்குப்பதிவு செய்யப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டில் சுமார் 265 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோபி பகுதியில் கஞ்சா வியாபாரியின் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள நிலம் பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்று சொத்துகள் வாங்கி இருந்தால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். மாவட்டத்தில் சாராய பாதிப்பு வெகுவாக இல்லை. மேலும் வெளியில் இருந்து வருகிறதா? என்பதை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மதுபான கடைகளில் இருந்து வாங்கி விற்பனை செய்து வருபவர்கள் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News