சூதாட்ட பணத்தை பிரித்துக் கொண்ட விவகாரம்: தாளவாடி போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட விவகாரத்தில், தனிப்பிரிவு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2024-10-01 02:15 GMT

போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் (பைல் படம்).

தாளவாடியில் சூதாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தை பிரித்துக் கொண்ட விவகாரத்தில், தனிப்பிரிவு தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கிடுசாமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் இளங்கோ ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் விளையாடி கொண்டு இருந்த கும்பலை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்து அவர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்பி விட்டனர்.

பின்னர், பறிமுதல் செய்த பணத்தை இவர்களே பங்கிட்டுக் கொண்டனர். இந்த விவரம் வெளியில் தெரிய வந்ததால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெங்கிடுசாமி, தனிப்பிரிவு தலைமைக் காவலர் இளங்கோ ஆகியோர் ஈரோடு ஆயுதப்படை பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தனிப்பிரிவு தலைமைக் காவலர் இளங்கோவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News