ஈரோட்டில் இலவச கோழி வளர்ப்புப் பயிற்சி: ஆகஸ்ட் 19ம் தேதி துவக்கம்

Erode News- இலவச கோழி வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

Update: 2024-08-09 11:00 GMT

Erode News- ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

Erode News, Erode News Today- இலவச கோழி வளர்ப்புப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாக 2ம் தளத்தில், கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சி நிலையத்தில் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு இலவச கோழி வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். 

இப்பயிற்சியில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு உள்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். 

ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

இப்பயிற்சியில், பங்கேற்க விரும்புவோர் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தை நேரில் அல்லது 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.

Tags:    

Similar News