கொங்கு கலை அறிவியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை
Erode news- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி பணியாளர் அமைப்பு சார்பில், கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது .;
Erode news- கொங்கு கலை அறிவியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாமில் எடுக்கப்பட்ட படம்.
Erode news, Erode news today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி பணியாளர் அமைப்பு சார்பில், கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது .
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் பணியாளர் அமைப்பின் சார்பில் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கான இலவச பார்வை திறன் பரிசோதனை முகாம் கொங்கு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமை வகித்தார். கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் சங்ககிரி கிளையைச் சேர்ந்த இந்தியா விஷன் நிறுவனத்தின் கண்பார்வை மருத்துவர்கள் மருத்துவர் ஜெனட், மருத்துவர் மெர்லின்அல்சா ஆபிரகாம் மற்றும் நிர்வாக அதிகாரி கோகுல் ஆகியோர் பங்கேற்று ஓட்டுநர்களுக்கு கண் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளையும் மற்றும் கண் பயிற்சிகளையும் இலவசமாக வழங்கினர்.
பின்னர், கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு தூரப்பார்வை, கிட்டப்பார்வை மற்றும் கண் புரை பரிசோதனைகள் செய்து கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு பார்வை குறைபாட்டினை போக்குவதற்கு தேவையான கண் கண்ணாடிகளையும் இலவசமாக வழங்கினர். மேலும், கண்புரை உள்ள ஓட்டுநர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்தனர். இம்முகாமில் பணியாளர் அமைப்பின் செயலாளர் அழகப்பன் நன்றியுரை ஆற்றினார்.
இம்முகாமில், பணியாளர் அமைப்பின் பொருளாளர் சுரேஷ் மற்றும் பணியாளர் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். முகாமில் கொங்கு கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர்.