ஈரோட்டில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி: ஆகஸ்ட் 1ம் தேதி தொடக்கம்
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கொல்லம்பாளையம் கரூர் பைபாஸ் சாலையில் ஆஸ்ரம் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் 2ம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 6ம் தேதி வரை 30 நாட்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் டேலி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த ஆண் , பெண் இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 18 வயதிலிருந்து 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது. இதுபற்றிய விவரங்களுக்கு, 0424-2400338, 8778323213, 7200650604 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என கனரா வங்கி பயிற்சி நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.