பெருந்துறை அருகே நாலரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நாலரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-07-22 23:30 GMT

கைது செய்யப்பட்ட சிவக்குமார்.

Erode News, Erode Today News, Erode Live Updates - பெருந்துறை அருகே நாலரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் மேக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 34). இவர் தெருவில் விளையாடிக் கொண்டு இருந்த நாலரை வயது பெண் குழந்தைக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், குழந்தை அழுதுள்ளது. சத்தம் கேட்டு ஓடி வந்த குழந்தையின் தாயார் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, சிவக்குமார் அங்கிருந்து கீழே விழுந்து எழுந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் தெய்வராணி மற்றும் மகளிர் உதவி காவல் ஆய்வாளர் இந்திராணி ஆகியோர் சிவக்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் ‌

Tags:    

Similar News