ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மனு

பெருந்துறை அருகே பத்திரம் இருந்தும் பட்டா இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Update: 2024-07-01 09:38 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் கோரிக்கை மனு அளித்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம். 

பெருந்துறை அருகே பத்திரம் இருந்தும் வீட்டு நிலத்திற்கு பட்டா இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம்,  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (1ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெருந்துறை அருகே பத்திரம் இருந்தும் வீட்டு நிலத்திற்கு பட்டா இல்லை எனக்கூறி நூற்றுக்கும் மேற்பட்டோருடன் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள தமிழ் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்த இடத்திற்கு கிரையம் செய்து மின் இணைப்பு மற்றும் குடிநீர் வழங்கி குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர்கள் குடியிருக்கும் இடத்தில் நிபந்தனை பட்டா இருந்த காலத்தினால் பட்டா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் இருந்தன. அந்த இடத்தின் நிலைமை என்ன என்று தெரியாமல் இருந்த அப்பகுதி மக்கள், அதே போல வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்ததால் ஒருமுறை வரைமுறைப்படுத்தும் சட்டப்படி இவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது.

தற்போது, அந்த இடத்திற்கு ஜீரோ வேல்யூவேஷன் என்ற முறையில் பட்டா இல்லாமல் இருந்து வருகிறது. இந்த இடத்திற்கு அப்போது மாவட்ட ஆட்சியர்தான் வழங்கினார், ஆனால், ஏன் ஜீரோ வேல்யூவேஷன் நிலமாக மாறியது என்று கேள்வி எழுப்பிய மக்கள், இந்த இடத்தை வங்கியின் மூலம் கடன் பெற்று வீடு கட்ட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. எனவே, இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார், என்றார்.

Tags:    

Similar News