சிலம்பம் சுற்றி அசர வைத்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி வைரவிழா முதல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சிலம்பம் சுற்றி மாணவ, மாணவிகளை அசர வைத்தார்.;

Update: 2024-10-07 00:00 GMT

Erode news- சிலம்பம் சுழற்றி அசத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

Erode Today News, Erode Live Updates, Erode News - கோபி வைரவிழா முதல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் சிலம்பம் சுற்றி மாணவ, மாணவிகளை அசர வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி வைரவிழா முதல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று (6ம் தேதி) நடந்தது. இதனை, முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதைப் பார்த்த, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கு சென்று பயிற்சியாளரிடம் விபரம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், மாணவர் ஒருவரிடம் கையில் ஒரு கம்பை வாங்கி சிலம்பம் சுற்றி அசத்தினார். அவர் சிலம்பம் சுற்றுவதை பார்த்த பள்ளி மாணவ, மாணவர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்ததோடு, வியப்படைந்தனர்.

இந்த நிலையில், இதை அங்கு இருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News