ஈரோட்டில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (31ம் தேதி) நடந்தது.;

Update: 2024-09-01 00:45 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட முன்னாள் ஆட்சியர்கள். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

Erode Today News, Erode Live Updates - ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் ஆட்சியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று (31ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியர்களாக இருந்தவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (31ம் தேதி) நடந்தது. இந்த நிகழ்ச்சியை ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஒருங்கிணைத்து நடத்தினார். இதில், ஈரோடு மாவட்டத்தின் 7வது ஆட்சியர் ஆர்.கிறிஸ்துதாஸ் காந்தி, 8வது ஆட்சியர் வி.கே.சுப்புராஜ், 9வது ஆட்சியர் ரா.கண்ணன், 32வது ஆட்சியர் டாக்டர் எஸ்.பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் ஆட்சியர்கள் தாங்கள் ஈரோட்டில் பணிபுரிந்த காலத்தை நினைவு கூர்ந்து, அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் சதீஸ் (வளர்ச்சி), ஈரோடு மாநகராட்சி ஆணையர் டாக்டர் மனிஷ், பயிற்சி ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகரின் முக்கிய தொழில் அதிபர்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி, யு.ஆர்.சி.தேவராஜன், அக்னி எம்.சின்னசாமி மற்றும் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News